India
அசாமின் ஹைலகண்டிக்கு நாளை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
அசாம் மாநிலத்தில் உள்ள ஹைலகண்டி நகரில் நேற்று (மே 10) காளிபிரி என்ற பகுதியில் ஒரு தரப்பு, பள்ளிவாசல் முன்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை எதிர்த்து மற்றொரு பிரிவு மறியலில் ஈடுபட்டது.
இதனையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நீடித்ததால் நேற்று மாலை 6 மணியில் இருந்து நாளை (மே12) இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஹைலகண்டி காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி, வன்முறை ஏற்பட்டதன் காரணமாக இன்னும் பதற்றம் தனியாததால், ராணுவ பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், மோதல் போக்கில் ஈடுபட்டவர்கள் எவரை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !