India
ஆந்திராவில் பட்டினிச் சாவு : கொடும் பசியால் மண்ணைத் தின்ற குழந்தை பலி!
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மகேஷ் - நீலவாணி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கும் நிலையில் அவரது சகோதரியின் 2 வயது குழந்தையையும் வளர்த்துள்ளனர். இந்தச் சூழலில் மகேஷ் - நீலவாணி தம்பதியர் வேலை இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வாழ்ந்துள்ளனர்.
சில நாட்களாக ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 2 வயது குழந்தை பசி தாங்காமல் மண்ணைத் தின்றுள்ளனது. இதனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த பெற்றோர் குழந்தைகளை புதைத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது இவர்களின் இன்னொரு குழந்தையும் கடந்தாண்டு பசியின் காரணமாக மண்ணைத் தின்று உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
பெற்றோர்களின் வறுமையும் கவனக்குறைவுமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற குழந்தைகளை போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் அந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் உணவு மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதற்கு ஆதார் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!