India

நிதியாண்டின் முதல் மாதத்திலேயே வேலையின்மை 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்

கடந்த 2018-2019ஆம் நிதியாண்டில் இறுதிமாதமான மார்ச் மாதத்தில் வேலையின்மை 6.71 சதவிகிதமாக இருந்தது. நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதத்திலேயே நாட்டின் வேலையின்மை 7.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.

மேலும் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம், 2017-2018ஆம் ஆண்டுக்காக தயாரித்த அறிக்கையை, ‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’ நாளிதழ் வெளியிட்டது. “2017-18-ம் ஆண்டில் இந்தியாவில், வேலையின்மை அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதம் அதிகரித்து விட்டது. இதற்கு முன்பு, 1972-73ஆம் ஆண்டில் தான் இந்த அளவிற்கான வேலையின்மை இருந்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும், “இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவிகிதம் உயர்ந்து தற்போது 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே, நகர்ப்புறங்களில் 7.8 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவிகிதமாகவும் இருந்துள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 2019 ஏப்ரலில் 7.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க மேம்படுத்தியுள்ளதாக பொய் பிரச்சரம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்த புள்ளி விவரம் நிச்சயம் கலக்கத்தை எற்படுத்தும். ஏற்கெனவே, பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல் டீசல் விலை, ஆகியவற்றால் பொருளாதாரம் அதலப்பாதாளத்திற்கு சென்றுள்ளதாக எதிர்க்கட்சியினார் குற்றச்சாட்டை முன்வைத்து குறிப்பிடத்தக்கது.