India
மக்களவை தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றமா?உச்சநீதிமன்றத்தில் வழக்கு
வழக்கறிஞர் மீனாட்சி அரோரா இன்று தலைமை நீதிபதி முன்பாக ஆஜராகி, வரும் 6 ஆம் தேதி முதல் ரம்சான் நோன்பு காலம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்துக்கு கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு வாக்குபதிவு நேரத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காலை 7 மணிக்குப் பதிலாக இரண்டு மணி நேரம் முன்னதாக காலை 5 அல்லது 5.30 மணிக்கு தொடங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு ஏழு மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!