India
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது வடமேற்கு திசையில் நகரும் ஃபானி: வானிலை மையம் எச்சரிக்கை!
வடமேற்கு திசையில் ஃபானி மிக அதி தீவிர புயலாக உருபெற்று மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறியது. தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல் நேற்று மிகவும் அதி தீவிர புயலாக உருப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் 730 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
Also Read
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !