India

ஆசிட் தாக்குதல்களிலிருந்து மீண்ட பெண்கள் நடத்தும் கஃபே!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கு அருகே செயல்படுகிறது ‘ஷீரோஸ் ஹேங்-அவுட்’ கஃபே.

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் இணைந்து 2014-ம் ஆண்டு முதல் இந்த கஃபேயை க்ரவுடு ஃபண்டிங் முறையில் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆசிட் தாக்குதல்களின் மூலம் 1,000 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். அவர்களில் பெரும்பான்மையானோர் சமூகத்தின் மீதுள்ள அச்சத்தின் காரணமாக புகார் கொடுக்காமல் மூடி மறைத்துவிடுகின்றனர்.

Sheroes’ hangout

அநீதி இழைக்கப்பட்ட பெண்கள் துணிந்து எதிர்கொண்டு வாழ்வதற்கான விழிப்புணர்வு முயற்சியாக இந்த கஃபேயை தொடங்கியுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிட் தாக்குதல்கள் ஏற்படுத்திய ரணங்களிலிருந்து மீண்டெழுந்த பெண்கள் இங்கு பலருக்கும் வழிகாட்டியாக விளங்குகிறார்கள். வாழ்க்கை குறித்த - எதிர்காலம் குறித்த அச்சங்களிலிருந்து எல்லோரையும் விடுவிக்கும் நம்பிக்கை ஒளியாகவே இவர்கள் திகழ்கிறார்கள்.