India
விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல் !
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரித்த மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கடிதம் அனுப்பியுள்ளார்.ரமணா தலைமை நீதிபதியின் நண்பர் என்பதால் உரிய விசாரணை நடைபெற வாய்பில்லை என்று தனது எதிர்ப்பை தெரிவித்து நேற்று அந்தப் பெண் கடிதம் எழதியதைத் தொடர்ந்து ரமணா விலகியுள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!