India
“அமித்ஷாவும் விரைவில் அழுவார்” - சல்மான் குர்ஷித் பதிலடி!
“2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் இறந்த தீவிரவாதிகளுக்காக சோனியா காந்தி கண்ணீர் வடித்தார்” எனப் பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்.
முன்னதாக, நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, "2008-ல் பட்லா ஹவுஸில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்தச் சண்டையின்போது சில போலீஸாரும் பலியாகினர். ஆனால், போலீஸாரைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்காக கண்ணீர் வடித்தவர் சோனியா" எனக் கூறியிருந்தார்.
அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சல்மான் குர்ஷித், "சோனியா கண்ணீர் சிந்துவதை நான் பார்க்கவில்லை. ஒருவேளை அமித்ஷா பார்த்தாரா என்னவோ? பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச் சண்டை குறித்து சோனியா காந்தி தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதை அமித்ஷா கண்ணீர் என்று கூறுவார் போல. அப்படியென்றால் அமித்ஷாவும் விரைவில் அழுவார்" என பதிலடி கொடுத்துள்ளார் சல்மான் குர்ஷித்.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!