India
ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு !
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என, மூன்று பிராந்தியங்களை கொண்டது. காஷ்மீரில், மூன்று தொகுதிகள், ஜம்முவில், இரண்டு; லடாக்கில் ஒரு தொகுதி. இந்தத் தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23 29, மே 6 என, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
அனந்த்நாக் தொகுதியில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வன்முறை ஏற்பட்டது.
இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க அனந்த்நாக் தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும் என்று காவல் துறை கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, மாலை 6 மணிக்குப் பதிலாக 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குல்காம் தொகுதியில் 29-ம் தேதியும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!