India
கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் நாளை ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்.,11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்தேறியது.
இதனையடுத்து மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), உத்தர பிரதேசம் (10) , குஜராத் (26) , சத்தீஸ்கர் (7) , பீகார் (5), அசாம் (4), மகாராஷ்டிரா (14), ஒடிசா (6), மேற்கு வங்கம் (5) , ஜம்மு காஷ்மிர் (1) , கோவா (2) , தத்ரா & நகர்ஹவேலி (1), டாமன் & டையூ (1) என 14 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், ஒடிசாவில் உள்ள 6 மக்களவைத் தொகுதியுடன் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியோடு தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். உ.பி-யில் ராகுல் காந்தியும், கேரளாவில் பிரியங்கா காந்தியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள 115 மக்களவைத் தொகுதிகளில் 1,612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பரப்புரைக்கான நேரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!