DMK Government
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திற்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும்;
தேனி மாவட்டத்திற்கு மாண்புமிகு கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களையும்;
திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களையும்;
தருமபுரி மாவட்டத்திற்கு மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும்;
தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களையும்;
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும்;
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களையும்;
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களையும்;
திருவாரூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களையும்;
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களையும்;
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களையும்;
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களையும்;
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும்;
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அவர்களையும் நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!