DMK Government

”பருவமழையை எதிர்கொள்ள நாங்க ரெடி” - மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நச் பதில்!

ஒரு நாள் ஒரு வார்டு என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு அருணாச்சல நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று நடைபெற்று வரும் தூய்மை பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது மழையால் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுதல், சேதமடைந்த சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கரூர் நகராட்சியில் தேர்தல் வாக்குறுதியின்படி 3,500 மின் விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக 2,300 மின் விளக்குகள் பொருத்த ரூ.6 கோடி மதிப்பில் கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி ஒரு லட்சம் மின் கம்பங்கள் தளவாட பொருட்கள் கொண்டு பருவ மழை காலத்தில் மின்தடை ஏற்படாமல் மின் விநியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களை பொறுத்தவரை கடந்த ஆட்சியில் சராசரியாக 58 சதவிகிதம் உற்பத்தி இருந்தது. கடந்த 4 மாதங்களில் பராமரிப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, 70 விழுக்காடாக உற்பத்தி அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் 85 சதவீதத்தை எட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

Also Read: எந்நேரமும் படிப்பா? பிக்னிக் அழைத்துச் செல்லாததால் விரக்தி; வீட்டிலிருந்து வெளியேறிய பெங்களூரு மாணவர்கள்!