DMK Government
#ElectionResults | தி.மு.க முன்னிலை பெற்று வரும் தொகுதிகளின் விவரம்!
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
இந்த தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். தற்போது வரை தி.மு.க கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 14 தொகுதியில் தற்போது தி.மு.க முன்னிலையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.
இந்நிலையில் தி.மு.க முன்னிலை பெற்றுள்ள தொகுதிகளின் விவரம் பின்வருமாறு: ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மெடக்குறிச்சி, கொளத்தூர், வேளச்சேரி, செங்கல்பட்டு, சேப்பாக்கம், திருச்சுழி, திருச்சி மேற்கு, காட்பாடி, பாளையங்கோட்டை, அண்ணா நகர், ஆண்டிபட்டி,பெருந்துறை, கும்பகோணம், அந்தியூர், பவானி
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!