DMK Government
“எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் இரட்டை இலை - தாமரைக்கு வாக்குகள் பதிவு?” : வாக்காளர்கள் குற்றச்சாட்டு !
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் வண்ணாரப்பேட்டையில் உள்ள பழனிசாமி மேல்நிலைப் பள்ளியில் 56 ஆண்கள் வாக்களிக்கும் வாக்கு மையத்தில் வாக்கு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பழுதான இயந்திரத்தை சரிசெய்ய முயன்றும் சரி செய்ய முடியாததால் மாற்று இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு மணியிலிருந்து 11 மணி வரை 148 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேப்போல், ஆவடி மற்றும் அவிநாசி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், தி.மு.கவுக்கு வாக்களித்தால் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்குகள் பதிவாகுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
அதேப்போல், விருதுநகர் மாவட்டம் சத்ரி மகளிர் பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரை சின்னத்தில் வாக்குகள் பதிவாகுவதாகவும் வாக்களார்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!