DMK Government
ஒரு ஓட்டுக்கு ரூ.7500, ஒரு பட்டுப்புடவைக்கு டோக்கன்: நாகையில் தேர்தலன்று டோக்கன் விநியோகித்த அதிமுகவினர்!
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாக ஒரு ஓட்டுக்கு ரூபாய் 7,500 ஒரு பட்டு புடவைக்கான டோக்கன் அதிமுகவினர் விநியோகம் செய்தது அம்பலமாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் தங்கவேல் தலைமையில் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாக ஒரு ஓட்டுக்கு 7.500 ரொக்கம், ஒரு பட்டு புடவைக்கான டோக்கன் விநியோகித்தது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்த நபரை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். டோக்கன் விநியோகம் செய்த அஞ்சம்மாள் மற்றும் பாஜகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜேந்திரன் ஆகியோர் தப்பி ஓட்டம்.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 218,219,220 ஆகிய வாக்குச்சாவடி முன்பு வாக்களிக்க வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் ஓ.எஸ்.மணியனுக்கு வாக்களித்தால் 7,500 ரூபாய் பணமும் பட்டுப் புடவையும் வழங்கப்படும் என 100க்கும் மேற்பட்டோருக்கு டோக்கனுகளை வழங்கியது.
இது குறித்து திமுகவினர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் 18-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் தங்கவேலுவை பிடித்து பறக்கும் படையினரிடம் திமுகவினர் ஒப்படைத்தனர். தப்பி ஓட்டம் பிடித்த அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!