DMK Government
சென்னை கண்ணகி நகரில் பணப்பட்டுவாடா: கையும் களவுமாக பிடித்த திமுகவினர் மீது நாயை ஏவி அதிமுகவினர் அராஜகம்!
தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் வேளையிலும், பணப்பட்டுவாடா செய்யும் அதிமுகவினரை தடுப்பதிலும் திமுகவினர் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.
அவ்வகையில், சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணப்பட்டுவடா செய்து கொண்டிருந்த தகவல் அறிந்த அப்பகுதி திமுகவினர் விரைந்து சென்று அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்தனர்.
பணப்பட்டுவாடா செய்த இருவரில் ஒருவரை பிடித்த நிலையில் மற்றொருவர் தப்பி ஓடி அவரது வீட்டிற்குள் புகுந்து நாய்யை அவிழ்த்துவிட்டதில் அதிமுகவினரை பிடிக்க வந்த திமுகவினரை நாய் கடித்தது. யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எழுதி வைத்திருந்த பேப்பரை திமுகவினர் கைபற்றினர்.
ஒரு ஓட்டுக்கு ரூபாய் 500 என ஒவ்வொரு குடும்பத்தில் எத்தனை ஓட்டு உள்ளது என 1000, 1500, 2000 வழங்கியுள்ளதை பேப்பரில் எழுதிவைத்துள்ள விவரங்களை கைப்பற்றினர்.
தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற வெறும் 3 நாட்களே இருக்கும் வேளையில் கடைசி நேரம் வரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். ’
இதனை தேர்தல் ஆணையமும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அதிமுக அரசு மீது மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பு மேலும் வலுத்து வருவதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?