DMK Government
“வீட்டில் ஒன்றுமில்லையாம்... வைக்கோல்போருக்குள் 1 கோடி ரூபாய்” - சிக்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ!
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அ.தி.மு.க வேட்பாளர்கள் பணத்தை வாரிறைத்து வாக்குகளைப் பெற முயன்று வருகின்றன.
ஆட்சியிலிருந்தபோது கொள்ளையடித்த பணத்தில் ஒருபகுதியை மக்களுக்கு லஞ்சமாகக் கொடுத்து வெற்றிபெறும் முயற்சியில் ஈடுபட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ தற்போது சிக்கியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் அ.தி.மு.க எம்.எல்.ஏ சந்திரசேகர். இவரது நிறுவனத்தில் ஜே.சி.பி ஓட்டுநர்களாக பணியாற்றும் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, கோட்டைப்பட்டியை சேர்ந்த ஆனந்த ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
மேலும், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் என்பவரது வீட்டிலும், வீரகோவில்பட்டியில் எம்.எல்.ஏவுக்கு நெருக்கமான ஒருவரின் கல்குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில், வலசுப்பட்டியை சேர்ந்த ஜே.சி.பி ஓட்டுநர் அழகர்சாமி வீட்டிற்கு நள்ளிரவில் சென்று சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
அழகர்சாமியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல்போரில் 500 ரூபாய் கட்டுகளாக பதுக்கி வைப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அ.தி.மு.க எம்.எல்.ஏ-விடம் பணியாற்றுபவரின் வீட்டின் வைக்கோல்போரிலிருந்து ரூபாய் 1 கோடி கைப்பற்றப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!