DMK Government
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #Election2021
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்:
காங்கிரஸ் - 25
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 6
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 6
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 6
விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3
மனிதநேய மக்கள் கட்சி - 2
தமிழக வாழ்வுரிமை கட்சி - 1
ஆதித்தமிழர் பேரவை - 1
மக்கள் விடுதலைக் கட்சி - 1
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் - 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விபரம் வருமாறு :
1. கந்தர்வக்கோட்டை(தனி)
2. அரூர் (தனி)
3. கீழ்வேளூர் (தனி)
4. திண்டுக்கல்
5. கோவில்பட்டி
6. திருப்பரங்குன்றம்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!