Election2026
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!
நாடே எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 5 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகள் இந்த முறையும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதோடு, புதிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளது. இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை குழு கடந்த ஜன.19-ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் தொடங்கப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
அதோடு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உறுப்பினர்கள் - கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் - அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் - எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து வரும் நிலையில், இதுவரை திமுக கூட்டணியில் உள்ள 13 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு :
1. காங்கிரஸ் - 28
2. தே.மு.தி.க. - 10
3. வி.சி.க. - 8
4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 5
5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5
6. ம.தி.மு.க. - 4
7. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - 2 தொகுதிகள்
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2 தொகுதிகள்
9. மனிதநேய மக்கள் கட்சி - 2 தொகுதிகள்
10. மனிதநேய ஜனநாயக கட்சி - 1 தொகுதி
11. SDPI கட்சி - 1 தொகுதி
12. முக்குலத்தோர் புலிப்படை - 1 தொகுதி
13. தமிழர் தேசம் கட்சி - 1 தொகுதி
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மதிமுக 4 தொகுதிகளில் 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 2 தொகுதிகள், SDPI, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி தலா 1 தொகுதி என மொத்தம் 11 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!