Election 2024
சிக்கிம் சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை தக்கவைக்கும் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய கட்சி : பாஜக படுதோல்வி!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை கவர்ந்தனர். மேலும் பாசிச பாஜக அரசின் அவலங்களை எடுத்துரைத்து எதிர்க்கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த சூழலில் அனைத்து தொகுதிகளும் வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 2) நடைபெறுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிமில் அம்மாநில ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து, இந்த தேர்தலில் விலகிய SKM கட்சி, தனித்து போட்டியிட்டது.
மணிப்பூர் கலவரம், விவசாயிகள் போராட்டம் என வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் எழுந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது SKM கட்சி. அங்கிருக்கும் 32 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட்டுள்ள நிலையில் 31 தொகுதிகளிலும் SKM கட்சி முன்னிலை வகிக்கிறது.
சிக்கிம் சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம் :
* SKM கட்சி - 31
* சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி - 1
* பாஜக - 0
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!