Election 2024
”கேள்வித்தாள் கசிவதுபோல் மோடியின் நேர்காணல் கேள்விகளும் கசிகிறது” : ராகுல் காந்தி கிண்டல்!
18 ஆவது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் இறுதிகட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலம் பக்தியார்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ”பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் அலை வீசுகிறது. ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். மோடி மீண்டும் பிரதமராக முடியாது.
கேள்வித்தாள்கள் கசிவதைப் போல, மோடியின் நேர்காணல் கேள்விகளும் கசிந்துவிடுகிறது. அரசியல் சட்டத்தைக் காப்பாற்றவே இந்தத் தேர்தல்.மோடியும் பாஜகவும் எவ்வளவு முயற்சி செய்தாலும் பூமியில் உள்ள எந்த சக்தியாலும் இந்த அரசியலமைப்பை மாற்ற முடியாது. இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இந்த அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ளது.
10 ஆண்டு மோடி ஆட்சியில் 22-25 புதிய வகை மகாராஜாக்களை உருவாக்கியுள்ளார். அவர்களுக்காக அவர் 24 மணி நேரமும் உழைத்தார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் காங்கிரஸ் கடசி அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!