Election 2024
“ஸ்மிருதி இராணிக்கு வாக்களிக்கக்கூடாது...” - அமேதியில் கூட்டாக சேர்ந்து உறுதி மொழி எடுத்த சமூகத்தினர் !
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி பாஜகவினர் பல்வேறு சர்ச்சை பேச்சுக்களை பேசி வருகின்றனர்.
அந்த வகையில் குஜராத் ராஜ்கோட் தொகுதிக்கு ஒன்றிய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான பர்ஷோத்தம் ரூபாலா ராஜ்புத் சமூக பெண்களை இழிவாக பேசினார். இவருக்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம் முன்னெடுத்தனர். மேலும் பர்ஷோத்தம் ரூபாலாவை விலக்க கோரி போராட்டமும் முன்னெடுத்தனர். ஆனால் இதனை பாஜக கண்டுகொள்ளாமல் இருந்ததால், பாஜகவுக்கு எதிராக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில ராஜ்புத் சமூகத்தினர் களமிறங்கினர்.
தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என்று மகா பஞ்சாயத்து கூட்டப்பட்டு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானிக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.
அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானிக்கு வாக்களிக்க கூடாது என்று ராஜ்புத் சமூகத்தினர் உறுதி மொழி ஏற்றுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் உறுதி மொழி ஏற்றுள்ள நிலையில், தற்போது ஸ்மிருதி இரானிக்கு எதிராகவும் உறுதி மொழி ஏற்கப்பட்டுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!