Election 2024
10 மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை : பிரஜ்வல் வீடியோ வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி அதிரடி கைது !
கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியின் எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna), ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். கடந்த ஏப்.26-ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பது தொடர்பான 2,976 ஆபாச வீடியோ வைரலானது. அதோடு அந்த வீடியோக்களில் கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரிகளும், பணிப்பெண்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பல பெண்களையும் மிரட்டி தனது பாலியல் ஆசைக்கு இணங்குமாறு பிரஜ்வல் கட்டாயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பிய மக்கள் போராட்டமும் வெடித்தது. இதையடுத்து வெளிநாடு தப்பியோடியுள்ள பிரஜ்வல் மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி அவரை கைது செய்வதற்கு போலீசார் காத்திருக்கின்றனர். இது விவகாரம் பூதாகரமான நிலையில், பிரஜ்வலின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் என்பவர், தான்தான் பிரஜ்வல் வீடியோ தொடர்பான பென்டிரைவை பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், JDS கட்சியின் கூட்டணியாக பாஜகவே இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், தற்போது பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.
கர்நாடக பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான தேவராஜ் கவுடா, பெண் ஒருவரிடம் கடந்த 10 மாத காலமாக பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!