Election 2024
”மோடி கண்ணீர் விட்டு அழுவதை விரைவில் பார்க்கலாம்” : ராகுல் காந்தி விமர்சனம்!
கர்நாடாகாவில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிஜப்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,"இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் ஒவ்வொரு பட்டதாரிக்கும் தொழிற்பயிற்சிக்கான உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஓர் ஆண்டிற்கு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என்று கூறிய ராகுல்காந்தி, இதில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்கும் உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.
மேலும், பெரும் செல்வந்தர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத சட்டம் நிறைவேற்றப்படும்.
முதல்கட்ட தேர்தலுக்குப் பிறகு மோடி பீதி அடைந்துள்ளதாகவும், வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மோடி முயற்சிப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!