Election 2024
கூட்டணி முறிவு : பஞ்சாப் மாநிலத்தில் தனித்து விடப்பட்ட பா.ஜ.க - பீதியில் மோடி!
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் இந்தியா கூட்டணி VS தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்து எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தில் வலுவடைந்து வருகிறது. ஆனால் அதே நேரம் பா.ஜ.க கூட்டணியில், கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது.
மேலும் உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.கவின் வலுவான மாநிலங்களிலேயே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மறுத்து விலகி வருகின்றனர். இது பா.ஜ.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க -அகாலி தளம் கூட்டணி முறிந்துள்ளது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளனர். இவர்களை வீழ்த்துவதற்காக பா.ஜ.க, அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இரு கட்சிகளும் பல ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த வந்தனர். 2020 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போதுதான் இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விரிசலை பா.ஜ.க ஒட்டவைக்கப்பார்த்தது. ஆனால் இந்த விரிசல் தற்போது பெரிதாகிவிட்டது.
இம்மாநிலத்தில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க தனித்து போட்டியிடப்போவதாக அம்மாநில தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!