DMK

“தி.மு.க இளைஞரணி, மகளிரணியில் புதிய நியமனங்கள்” : தலைமை கழகத்தில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில இளைஞர் அணிச் செயலாளர் – துணைச் செயலாளர்களை லோசனைக்குழு நியமனம் செய்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில இளைஞர் அணிச் செயலாளர் - துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல்,, .ரகுபதி(எ) இன்பா ஏ.என். ரகு, நா.இளையராஜா, ப. அப்துல் மாலிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோரை நியமித்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் - பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்களை ஆலோசனைக்குழு நியமனம் செய்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தி.மு.க. மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சனும், மகளிரணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் மற்றும் துணைச் செயலாளராக பவானி ராஜேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மகளிர் தொண்டர் அணிச் செயலாளராக நாமக்கல் ப. ராணி, மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளராக தமிழரசி ரவிக்குமார், மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்களாக சத்யா பழனிகுமார், ஜெ.ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்களாக விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ், சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆளுநரின் செயல் கூட்டாட்சி முறைக்கு ஏற்றதல்ல - திமுக IT செயலாளர் T.R.B.ராஜா !