DMK

சிறப்பாக பணியாற்றிய தி.மு.க நிர்வாகிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. வழங்கிச் சிறப்பித்த தலைவர் மு.க.ஸ்டாலின்!

தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் தி.மு.கழக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பெரியார் விருதை - மிசா பி.மதிவாணன் அவர்களுக்கும், அண்ணா விருதை - தேனி எல்.மூக்கையா அவர்களுக்கும், கலைஞர் விருதை - கும்முடிப்பூண்டி கி.வேணு அவர்களுக்கும், பாவேந்தர் விருதை - திருமதி.வாசுகி ரமணன் அவர்களுக்கும், பேராசிரியர் விருதை - பா.மு.முபாரக் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் தி.மு.க.வில் ஒன்றிய, நகர, பேரூர், மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு கலைஞர் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அந்தவகையில், கலைஞர் அறக்கட்டளையின் பாராட்டுச் சான்றிதழையும், ரூ. 1 லட்சம் பரிசையும் பெற்றவர்கள் விவரம் வருமாறு:

தர்மராஜ் பொன்மலை தெற்கு பகுதி செயலாளர், திருச்சி

குமார வடிவேல், சூரியபாளையம் 1ஆம் பகுதி செயலாளர், ஈரோடு

கணேசன், கலைஞர் நகர் பகுதி செயலாளர், மதுரை

தண்டபாணி, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர், காஞ்சி

சேதுராமன், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர், விழுப்புரம்.

கந்தசாமி, கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர், கரூர்.

சிறை செல்வன், மதுரை மேற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர், மதுரை.

விஸ்வநாதன், மகாபலிபுரம் நகர கழக செயலாளர், காஞ்சி.

சக்கரை, விழுப்புரம் நகர கழக செயலாளர், விழுப்புரம்.

பாஷா, சேலம் நகர கழக செயலாளர், சேலம்.

மகேஷ், நாகர்கோயில் நகர கழக செயலாளர், கன்னியாகுமரி.

செல்வம், பள்ளிகொண்டான் பேரூர் கழக செயலாளர், வேலூர்.

சண்முகம், அன்னம்பாளையம் பேரூர் கழக செயலாளர், கோவை.

முத்துக்குமாரசாமி, நத்தம் பேரூர் கழக செயலாளர், திண்டுக்கல்.

பஞ்சநாதன், திருபுவனம் பேரூர் கழக செயலாளர், தஞ்சை.

அஜய ராமன், பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர்.

Also Read: “இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக தி.மு.க ஆட்சிதான் அமைய வேண்டும்” : முப்பெரும் விழாவில் முதல்வர் சூளுரை!