DMK
ஜீரணிக்க முடியாத துயரத்திலும் மக்கள் நலப்பணி காணும் ஒசூர் திமுக MLA : திகைப்பில் ஆழ்ந்த மக்கள்!
அண்மையில் பெங்களூருவில் நடந்த கார் விபத்தில் ஒசூர் தி.மு.க. எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷின் மகன் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 19 அன்று ஒய்.பிரகாஷின் மனைவி சிவம்மா உடல்நலக் குறைவால் காலமானார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மகனின் இறப்பு செய்தி தி.மு.க. எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷுக்கு ஆற்றொணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என பலரும் நேரில் சென்று ஒய்.பிரகாஷுக்கு ஆறுதலையும், அவரது மகனின் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மனைவி மகனை இழந்திருந்தாலும் மக்கள் நலப்பணியை தொடர்வதற்கு களத்தில் இறங்கியிருக்கிறார் ஒசூர் திமுக எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ். அதன்படி, நேற்று அவர் தொகுதி மக்களை சந்தித்து பகுதியில் நிலவும் குறைகளை கேட்டறிந்திருக்கிறார்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளர் என்ற வகையில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையை மேற்கொண்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் நேபாளத்தில் நடைபெற இருக்கும் Under 19 தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் சாரதி என்ற இளைஞருக்கு உதவி புரிந்திருக்கிறார் ஒய்.பிரகாஷ்.
கபடி போட்டியில் பங்கேற்க போதிய நிதியில்லாமல் தவித்து வந்த இளைஞர சாரதியின் நிலையை அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ அவரை நேற்று வரவழைத்து அவருக்கு தேவையான நிதி மற்றும் இன்னபிற உதவிகளையும் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு கட்சியினரிடையேவும், மக்களிடத்திலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!