DMK
கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், காட்பாடியில் துரைமுருகன்: வெளியானது தி.மு.க வேட்பாளர் பட்டியல்! #Election2021
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் போட்டியிடுவதற்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, எந்த கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்ற விவரங்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வேட்பாளர்கள் பட்டியலையும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
அவ்வகையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
அதில், சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், காட்பாடி தொகுதியில் துரைமுருகனும் போட்டிடுகின்றனர். அதற்கடுத்தபடியாக பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என் நேரு, கே.ஆர் பெரிய கருப்பன், கீதா ஜீவன், வெள்ளகோவில் சாமிநாதன், பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் வேட்பாளராக இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் பின்வருமாறு:-
திருச்சி மேற்கு - கே.என்.நெரு
திருக்கோவிலூர் - க.பொன்முடி
ஆத்தூர் - ஐ.பெரியசாமி
சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்
திருச்சுழி - தங்கம் தென்னரசு
சிங்காநல்லூர் - நா.கார்த்திக்
காங்கேயம் - வெள்ளகோவில் சாமிநாதன்
ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி. எழிலரசன்
ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்
சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
கரூர் - செந்தில் பாலாஜி
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
திருவாரூர் - பூண்டி கலைவாணன்
திருப்பத்தூர் - கே.ஆர்.பெரிய கருப்பன்
மதுரை மத்தி - பழனிவேல் தியாகராஜன்
தூத்துக்குடி - கீதா ஜீவன்
தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாபதி
திருவண்ணாமலை - எ.வ.வேலு
ராதாபுரம் - அப்பாவு
ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்
திரு.வி.க. நகர் - தாயகம் கவி
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?