DMK
திருச்சி பொதுக்கூட்டம் தமிழகத்தின் “விடியலுக்கான முழக்கம்” : தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (05-03-2021) காலை, தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.
அப்போது, நாளை மறுநாள் (07-03-2021) அன்று திருச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தின் "விடியலுக்கான முழக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும்.
அந்தக் கூட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் கழகத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
அதோடு, நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் - நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ. இராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் – பொறுப்பாளர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!