DMK

அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்: வேலுமணியை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்!

கோவை மாநகர் விளாங்குறிச்சி சாலையில் அமைச்சர் எஸ். பி. வேலுமணியைக் கண்டித்து, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க நிர்வாகிகள், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 37 வது வார்டு பகுதியில் சாலை புதுப்பிக்கும் பணிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது. மக்களின் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் அரசு விழாக்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கோவை மாவட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் அவர்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை என கூறி போராட்டம் நடைபெற்றது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு , கடந்த 5 ஆண்டுகாலமாக, அரசு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்காமல், தொடர்ந்து அராஜக, சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வரும், அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் அராஜகப் போக்கைக் கண்டித்து, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புக்கள் நூற்றுக்கணக்கானோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

Also Read: “அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் புறக்கணிக்கும் அ.தி.மு.க” - கார்த்திக் MLA கண்டனம்!