DMK
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் - தலைமைக் கழகம் அறிவிப்பு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்டமாக பங்கேற்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் குறித்து தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இக்கூட்டங்களில், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என மக்கள் முன்னிலையில் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.
கரூர், கோவை, ஈரோடு, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் மத்தியில் அ.தி.மு.க அரசின் - அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.
அடுத்தகட்டமாக, தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சென்னை ஆகிய மாவட்டங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் 7-ம் தேதி காலை, தருமபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலை சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியிலும், 8-ம் தேதி காலை நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
மேலும், 9-ம் தேதி காலை மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், அன்றைய தினம் மாலையில் தேனி வடக்கு மாவட்டம் போடி சட்டபேரவைத் தொகுதியிலும், 10-ம் தேதி காலை சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்'” என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?