DMK
“ஈரோட்டில் ஒரு அறிவிப்பு.. சென்னையில் ஒரு அறிவிப்பு.. உங்களுக்கே நியாயமா இது?” - தங்கம் தென்னரசு கேள்வி!
அக்டோபர் 1ம் தேதி முதல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்னதான் சார் பண்ணப் போறீங்க?
அக்டோபர் 1ம் தேதி 10, 11, & 12 ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும்ன்னு சொல்றீங்க. ஆனால், கூடவே ஆன்லைன்ல பாடம் நடத்துவோம்ன்றீங்க.
“பாடங்களைச் சொல்லித்தருவதற்கு இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கறோம்ன்னு” சொல்றீங்க. அப்படியான்னு கேக்குறதுக்குள்ள, மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம்ன்னு ஒரு ‘குண்டைப்’ போடறீங்க. அப்படியே சந்தேகம் கேட்க பள்ளிக்கூடத்துக்கு வர்ரதுன்னா அப்பா, அம்மாகிட்ட எழுத்துப் பூர்வமா எழுதி வாங்கிட்டு வந்து சந்தேகம் கேளுங்கன்னு ஜி.ஓ போட்டுட்டு நாளைக்கு ஒண்னுன்னா பழிய அவங்க தலைல கட்டப் பார்க்கறீங்க.
பாடத்திட்டத்துல எவ்வளவு பாடம் இந்த ஆண்டு குறைக்கப் போறீங்க? மொத்தத்துல இத்தனை சதவீதம்ன்னு குறைக்கப் போறீங்களா? அல்லது, ஒவ்வொரு பாடங்களிலும் குறைப்பு இருக்குமா? இதை எல்லாம் தெளிவா சொல்லாம மொட்டையா குழு அறிக்கை மேல முதலமைச்சர் முடிவு எடுப்பார்ன்னு எத்தனை நாள் சொல்லீட்டே இருப்பீங்க?
இதுல எதுவுமே உறுதியா தெரியாம எந்தப் பாடத்தைப் பள்ளிக்கூடத்துல நடத்துறது? பாடத்தை நடத்தாம பிள்ளைங்க அதுல என்ன சந்தேகத்தைக் கேக்குறது?
ஈரோட்டில் ஒரு அறிவிப்பு ; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு. ‘இடக்கருக்கு வழி எங்கேன்னா கிடக்கிறவங்க தலை மேலே’ அப்டின்னு சொல்ற மாதிரி எல்லார் மண்டையையும் பிய்த்துக்கொள்ள வைத்து இந்தக்குழப்பம் பண்றீங்களே?
உங்களுக்கே நியாயமா இருக்கா, சாரே?” என விமர்சித்துள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!