DMK
‘அண்ணா’ ‘காமராஜர்’ பெயர்களை இருட்டடிப்பு செய்வதை நிறுத்தக்கோரி மத்திய அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
சென்னை சர்வதேச - உள்ளூர் விமான நிலையங்களுக்கு 1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது சூட்டப்பட்ட ‘அண்ணா சர்வதேச விமான நிலையம்’ - ‘காமராஜர் உள்ளூர் விமான நிலையம்’ பெயர்களை இருட்டடிப்பு செய்வதை நிறுத்தி, அவர்கள் பெயருடன் அறிவிப்பு முறையாக செய்திட வலியுறுத்தி மாண்புமிகு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களுக்கு தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் - தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு :
“சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை புரியும்போதும் அல்லது புறப்படும் போதும் தவறான முறையில் செய்யப்படும் அறிவிப்பு குறித்த விவரத்தினை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, சென்னை உள்ளூர் விமான முனையத்தினை “காமராஜர் விமான நிலையம்” என்றும் - சென்னை பன்னாட்டு விமான நிலையத்தினை “அண்ணா சர்வதேச விமான நிலையம்” என்றும் அறிவித்தது பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அவ்வாறு பெயர் சூட்டப்பட்ட பின்னரும், பெரும்பாலும் சென்னை விமான நிலையம் என்றும், சென்னை சர்வதேச விமான நிலையம் என்றும் தற்போதும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சென்னை விமான நிலைய பெயர்கள் குறித்த அறிவிப்புகளை முறையாகச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நெறிமுறைக் கட்டளைகள் வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!