DMK

அரசை நம்பிப் பயன் இல்லை - தனது தொகுதிக்காக களமிறங்கிய தி.மு.க எம்.எல்.ஏ! - வீடியோ

இந்தியாவில் பரவிவரும் கொரோனா தமிழகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னேற்பாடுகள் இன்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த உதவிகளும் தமிழகத்தில் பெரும்பாலான ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை. மேலும் பாதுகாப்பு உபகரணமின்றி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க மற்றும் தி.மு.க அமைப்புகள் சார்பில் தூய்மை பணியாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பலரும், நிர்வாகிகளும் நேரடியாக உதவித் தேவைப்படுவோர் இல்லங்களுக்குச் சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில், திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் இளைஞரணி துணை செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதியில் பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுகு செய்து வருகின்றார்.

திருச்சி தேசிய நெடுச்சாலையில் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தனது சொந்த நிதியில் இருந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, கிருமிநாசினி தெளிக்க பயன்படும் வாகனத்தை பெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடமும் பேசி வாகனத்தைப் பெற்று பணியை துரிதப்படுத்தியுள்ளார்.

இன்று அதிகாலை முதலே பணியை துவக்கி வைத்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி தானே கிருமிநாசினிகளை சாலைகளில் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஏழைகளின் பசியைப் போக்க 8 லட்ச ரூபாய்க்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தி.மு.க நிர்வாகி: குவியும் பாராட்டுகள்!