DMK
குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ இறுதிச் சடங்கின்போது துயர் தாளாமல் கலங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த குடியாத்தம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தியபிறகு, துயருற்று கண் கலங்கியுள்ளார்.
குடியாத்தம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு நேரில் சென்று, மாலை மணிவித்து அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார்.
நேற்று சென்னை திருவொற்றியூரில் மறைந்த கே.பி.பி.சாமியின் உறுதி ஊர்வலத்தில் தொண்டர் திரளோடு பங்கேற்ற அவர், துயர் நிறைந்த முகத்தோடு காணப்பட்டார்.
அடுத்தடுத்து இரு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிதும் துயருற்றுள்ளார். மிக எளிமையாக வாழ்ந்து, மக்கள் பணி செய்து மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினார்.
இந்தக் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அங்கிருந்த சிலரும் தி.மு.க தலைவர் கலங்குவதைப் பார்த்து கண் கலங்கியுள்ளனர். இந்தக் காட்சி பத்திரிகை புகைப்படக்காரர்களின் கண்களில் சிக்கி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தலைவர் கலங்கியதால், தி.மு.க தொண்டர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !