DMK
"தி.மு.க குடும்பக் கட்சிதான்” : பொய் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கும் ‘பொய் பெட்டி’யின் 3வது அத்தியாயம்!
ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க-வும், பாசிச நடவடிக்கைகளால் மக்களை வதைக்கும் பா.ஜ.க-வும், அவர்களுக்கு எதிராகப் போராடும் தி.மு.க-வின் எதிர்வினைகளை மக்கள் மத்தியில் திசைதிருப்ப அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
பொய்களுக்கும், புரட்டுகளுக்கும் பெயர் போன எதிரிகளின் அவதூறுக் கணைகளைச் சுக்குநூறாக்க, ‘பொய் பெட்டி’ எனும் முயற்சியை முன்னெடுத்தது உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க இளைஞரணி.
பெரியார், அண்ணா, கலைஞர் காலம் முதல் தற்போது வரை தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் பொய்களை முறியடிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் அழைப்பாளராக பத்திரிகையாளர் கோவி.லெனின் பங்கேற்றார்.
சமூக வலைதளங்களில் உலவும் பலரும், தி.மு.க-வினரும் எழுப்பிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ‘பொய் பெட்டி’ நிகழ்வில் பதிலளித்தார் கோவி.லெனின்.
தி.மு.க குடும்பக் கட்சி என காலங்காலமாகப் பரப்பப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு உண்மை வரலாற்றின் வழியாக கோவி.லெனின் விளக்கங்களை வழங்கினார். அந்தக் காணொளி தி.மு.க இளைஞரணியின் யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காணொளியை வெளியிட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க எனும் பேரியக்கம், ‘குடும்ப கட்சி’தான். ஆனால் இக்குடும்பம் அடிமைகளாலும், ஆதிக்கவாதிகளாலும் ஆனதில்லை. வழிநடத்தும் ‘அண்ணா’க்களாலும், உணர்ச்சிமிகு ‘உடன்பிறப்பு’களாலும், பேரன்புகொண்ட ‘தம்பி’மார்களாலும், பாசமிகு தாய்மார்களாலும் கட்டமைக்கப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!