DMK
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தி.மு.க வேட்பாளரை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குனேரி தொகுதி தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று வேட்பாளர்களுக்கான விருப்பமனு பெறப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜாராமன், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெய ரவிதுரை, முகையூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளிட்ட 22 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.
உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று கவுதம சிகாமணி எம்.பி., விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வந்தது.
அதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளராக நா.புகழேந்தியை அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு விக்கிரவாண்டி தொகுதியில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க பொருளாளராக பணியாற்றி வருகிறார். முன்னதாக தி.மு.க-வில் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராக புகழேந்தி 3 முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!