DMK
சென்னையில் மீட்கப்பட்ட 61 குழந்தைத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப தனி ‘கோச்’: திமுக எம்.பி நடவடிக்கை!
சென்னையில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 61 வடமாநில சிறுவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலில் தனி கோச் பெற்றுக் கொடுத்துள்ளார் தி.மு.க எம்.பி., டாக்டர்.செந்தில்குமார்.
சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியில் செயல்படும் நகை பட்டறைகளில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் அதிகளவில் வேலை செய்வதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலிஸாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, 61 வட மாநில சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலிஸார் அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இதுபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலர் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வருகின்றனர். வேலைக்காகவும், ஊதியத்திற்காகவும், வேறு வழியின்றி பெற்றோரே தங்கள் பிள்ளைகளை கொத்தடிமைகளாக அனுப்புவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில், தரும்பரி மக்களவைத் தொகுதி தி.மு.க உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார், காப்பகத்திற்குச் சென்று மீட்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்தார். பின்னர் அதிகாரிகளுடன் பேசி, மறுவாழ்வு திட்டம் மூலம் வழங்கப்படும் உதவிகள் கிடைப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார்.
மேலும், சென்னையில் மீட்கப்பட்ட 61 குழந்தை தொழிலாளர்களும் அவர்களது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிற்குச் செல்ல, ஹவுரா ரயிலில் தனிப்பெட்டி வேண்டும் என தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தென்னக ரயில்வே நாளை ரயிலில் சிறுவர்களுக்காக ஒரு கோச் ஒதுக்க முடிவு செய்துள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!