DMK
சேலத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு விழா : தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முழு உருவச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது.
கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஆக.,7ம் தேதி முரசொலி அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேலத்தில் தலைவர் கலைஞருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு மாவட்டம் மற்றும் தாரமங்கலம் ஒன்றிய தி.மு.கவினர் சார்பில் தாரமங்கலம் தேர் நிலையம் அருகே கலைஞருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சிலைத் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!