DMK
முரசொலியில் தலைவர் கலைஞர் சிலை : அறிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய தகவல்கள் !
முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி முரசொலி அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவசிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சிறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைத் தாங்கினார்.
கலைஞரின் நினைவு நாளில் முரசொலி அலுவலகத்தில் அமர்ந்து கடிதம் எழுதும்ப் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள திருவுருவ சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
முத்தமிழறிஞர் கலைஞர் சிலை மேல் பகுதியில் இருந்து அடி பீடம் வரை 30 டன் எடைக் கொண்டதாகும்.
16 டன் எடை, 6 அடி உயரம் கொண்ட ஒரே கருப்பு கிரானைட் கல்லால் முப்பரிமாண தோற்றத்தில் அந்த பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஸ்கான் ஒயிட் என்ற கிரானைட் கற்களைக் கொண்டு அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளனர்.
நீளம் 10 அடி, அகலம் 10 அடி, உயரம் 9 அடி என்ற அளவில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பீடம் வடிவமைப்புக்கான கிரானைட் கல் மைசூர் அருகே உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டது.
மேலும் இந்த பீடத்தை திருவண்ணாலையில் உள்ள அருணை கிரானைட் கம்பெனி வடிவமைத்துக் கொடுத்துள்ளது.
அமர்ந்த நிலையில் உள்ள கலைஞர் வெண்கல சிலையின் அகலம் 6.3 அடி, உயரம் 6.5 அடியாக உள்ளது.
இப்படியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை திறந்து வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலை திறப்பு விழாவுக்கு பிறகு மெரினாவில் அமைந்துள்ள தலைவர் கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி மரியாதை செய்தார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!