DMK

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரும் தி.மு.க!

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இன்று (3.7.2019) கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவிருக்கிறார்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கும் நிலையில் அதுகுறித்து பிரச்னைகளை எழுப்பி விவாதிக்க எதிர்க்கட்சியான தி.மு.க முடிவு செய்துள்ளது.

உயர் மின்னழுத்தக் கோபுரம் அமைக்கும் தமிழக அரசின் திட்டம் தொடர்பாகவும் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு பல்வேறு மாவட்ட விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவையில் பேசிய கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், “கஜா புயலின்போது ஏராளமான மரங்கள், விவசாய நிலங்கள், ஆறு, குளங்கள் சாலைகள் பாதிக்கப்பட்டன. வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் 2 லட்சம் தேக்கு மரங்கள் சாய்ந்தன. அதை ஈடு செய்யும் வகையில் மரக்கன்றுகளை நடவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.