DMK
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாநிலங்களவை தி.மு.க வேட்பாளர்கள்!
தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 3 இடங்கள் தி.மு.க சார்பாக நிரப்பப்பட இருக்கின்றன. இதன் மூலம் மாநிலங்களவையில், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக உயரவுள்ளது.
2019 ஜூலை 18 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தி.மு.க சார்பில் பல வழக்குகளில் ஆஜராகி வெற்றியைத் தேடித் தந்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கலைஞரால் ‘வின்’சன் என வர்ணிக்கப்பட்டவர். போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளரான சண்முகம் கலைஞரின் அபிமானத்தைப் பெற்றவர்.
மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று முன்பு இருவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தைப் பெற்றுக்கொண்டனர்.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!