DMK
செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்- சாதுர்யமாக காப்பற்றிய எம்.எல்.ஏ சேகர்பாபு!
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் துறைமுகம் பகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளவர் சேகர்பாபு. நேற்று முன்தினம் இரவு தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி சேகர் பாபு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சத்யா நகர் போர்நினைவு சின்னம் அருகே நிறைய கூட்டம் சேர்ந்திருந்தது. போலீசாரும், தீயணைப்பு துறையினரும் நின்றிருந்தனர். இதை பார்த்ததும், சேகர்பாபு வண்டியை நிறுத்த சொல்லி கீழிறங்கினார். சேகர் பாபுவை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் ஓடிவந்து விஷயத்தை சொன்னார்கள்.
சத்யா நகரை சேர்ந்த மாறன் என்பவருக்கு குடும்பபிரச்சனை காரணமாக தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுப்பதாக சொன்னார்கள். அவரது குடும்பத்தினரும், போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கீழே இறங்கி வந்துவிடுமாறு மாறனிடம் மன்றாடி கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் கேட்ட சேகர்பாபு, " எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசிக்கலாம்" என்றார். சேகர்பாபுவின் பேச்சுக்கினங்க மாறன் கீழிறங்கி வந்தார். இறங்கி வந்த அவரிடம் காரில் வைத்திருந்த தன்னுடைய சட்டையை எடுத்து கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார். பின்னர், அவருடைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு பின்னர்தான் அங்கிருந்த மொத்த கூட்டமும் நிம்மதி ஆடைந்து.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்