DMK
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 24ம் தேதி போராட்டம் !
தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 24ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளதாக சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஜூன் 24 (திங்களன்று) காலை 9.30 மணியளவில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
குடிநீர் பஞ்சத்தைப் போக்க மாநில அரசு உடனே செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க.,வின் சென்னை மாநகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!