DMK
தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை - கனிமொழி எம்.பி குற்றசாட்டு !
சென்னை விமான நிலையத்தில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"பொள்ளாச்சி போன்ற சம்பவமாக இருந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பெண்கள் பாதுகாக்க கூடிய எந்தவொரு செயல்பாட்டையும் அரசு செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் திணிக்க வேண்டும் என்று நினைக்க கூடிய விசயங்களை தான் திணிக்கிறார்களே தவிர, மக்களை பாதுகாக்கவும் பெண்களை பாதுகாக்கவும் எந்தவித அக்கறையும் இல்லாத சூழ்நிலை உள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை. எல்லா தரப்பு மக்களையும் பாதிக்க கூடிய வகையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. தண்ணீர் தொட்டிக்கு முன் எத்தனை குடங்கள் வைக்க முடியும் என்ற கணக்கே இல்லை. தண்ணீருக்காக மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆற்றில் உத்து எடுத்து மக்கள் மணிக்கணக்கில் காத்து இருந்து தண்ணீர் எடுக்கின்றனர். இதுபோன்ற சூழலில் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க ஆட்சியில் சென்னை மக்களுக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால் இந்த அரசு அதை சிந்திக்காமல் தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை செயல்படுத்தாமல் பராமரிக்காமல் விட்டதாலும் நீர்நிலைகள் சரியாக தூர் வாராமல் விட்டதால் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் நிரந்தர தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை" கூறினார்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!