DMK
ஜூன் 3 ஆம் தேதி திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் - உதயநிதி ஸ்டாலின் உறுதி !
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சீத்தபட்டி காலணி, வெஞ்சமாங்கூடலூர், புங்கம்பாடி கார்னர், கோவிலூர், நாவமரத்துபட்டி உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்
"சென்ற மாதம் மோடியை வீட்டுக்கு அனுப்ப ஒரு முடிவெடுத்தீர்கள். அதுபோல, இந்த மாதம் ஒரு முடிவெடுத்து இங்குள்ள ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
எடப்பாடி தொகுதியில் பிரச்சாரம் சென்றபோது எடப்பாடி பழனிச்சாமி என்று முதல்வரை அழைப்பது தங்களுக்கு விருப்பமில்லை எனவும் முதல்வரை வெறும் பழனிசாமி என்று கூறுங்கள் என்று தெரிவித்தனர்.
ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. ஒரு முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
22 சட்டமன்ற தொகுதிகளிலும் வென்றால் திமுக ஆட்சி. ஜூன் 3 ஆம் தேதி திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும். திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, கல்வி, விவசாய கடன் ரத்து செய்யப்படும், மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும், கூட்டுறவு நகை கடன் ரத்து அரவக்குறிச்சி பகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
பிரச்சாரத்தின் பொது பொன்முடி, சக்ரபாணி, சின்னசாமி, நான்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!