Cinema

பத்தா முதல் அக்கா வரை... வரிசை கட்டி நிற்கும் இந்த வார OTT வரவுகள் என்னென்ன? - விவரம்!

அண்மை காலமாக திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் வெளியான டோரதி, பத்தா, மொத ராத்திரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் தற்போது OTT-ல் வெளியாக வரிசை கட்டி நிற்கிறது.

அதன் விவரம் வருமாறு :-

=> பத்தா - NETFLIX

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதாகாதி ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பத்தா'. லிஜோமோல் ஜோஸ், மாஸ்டர் சாய் பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த சூழலில் இந்த திரைப்படம் வரும் அக்.29-ம் தேதி NETFLIX OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் காணலாம்.

=> அன்பில் அவன் - Sony LIV

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் தயாரித்து நடித்துள்ள படம் தான் 'அன்பில் அவன்'. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இந்த சூழலில் இந்த திரைப்படம் Sony LIV வரும் அக். 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

=> சிக்மா - NETFLIX

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான திறப்படம்தான் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்​சுமி சுதர்​சனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த சூழலில் இந்த திரைப்படம் வரும் அக்.30-ம் தேதி NETFLIX OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் காணலாம்.

=> Immortal - Sony LIV

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் காயடு லோஹர் நடிப்பில் உருவாகிய ரொமாண்டிக் ஹாரர் திரைப்படம் தான் 'இம்மார்ட்டல்' (Immortal). மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான 'Immortal', வரும் அக். 30-ம் தேதி Sony LIV OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் காணலாம்.

=> The Dark Heaven - Amazon Prime Video, Aha

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து, பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 'தி டார்க் ஹெவன்' (The Dark Heaven). சஸ்பென்ஸ் மற்றும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இந்த படம், வரும் அக்.30-ம் தேதி Amazon Prime Video, Aha ஆகிய OTT தளங்களில் வெளியாகவுள்ளது.

இதுபோக சில வெப் தொடர்களும் புதிதாக வெளியாகவுள்ளது. அதன் விவரம் வருமாறு :->

=> அக்கா - NETFLIX OTT

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’ வெப்தொடரானது, NETFLIX OTT தளத்தில் வரும் அக்.30-ம் தேதி வெளியாகவுள்ளது. தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ள இந்த தொடரானது, 1980-களின் பின்னணியில், பெண்களை மையமாக கொண்ட கேங்ஸ்டர் கதையாக இருக்கிறது. இதன் முதல் சீசன் இன்னும் 2 நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸ், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் காணலாம்.

=> Love Always - JioHotstar

கௌரி கிஷன், ஜெயபிரகாஷ், ஜெயசுதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Love Always' என்ற வெப் தொடர், வரும் அக்.30-ம் தேதி JioHotstar OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Also Read: ‘டோரதி’யின் வெற்றியும்... கலைஞர் போட்ட விதையும்! : தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!