Cinema
Twist வைத்த Bigg Boss; கதறி அழுத சாண்ட்ரா... BB வீட்டில் இருந்து வெளியேறும் பிரஜின்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி 48 நாட்களை கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் wildcard entry-யாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித், பார்கவ் ஆகியோர் வீட்டிற்குள் வந்திருந்தனர். "வாரம் முழுக்க கத்திகிட்டே இருக்கீங்க" என்று வார வாரம் போட்டியாளர்களை எச்சரித்து கொண்டிருந்த விஜய்சேதுபதி, இந்த வாரம் இறுதியில் போட்டியாளர்களை சந்திக்கும்போது அந்த கூட்டத்தில் அவரும் ஒருநபராகவே மாற்றப்பட்ட காட்சிகளை நேற்றைய நிகழ்ச்சியில் காண முடிந்தது.
போனவாரம் பிக்பாஸ் வீடு சாம்பார் squad, mop மாயாவி, flush fighters என்று மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டது. இதில், அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்து entertainment டாஸ்காக வழங்கி இருந்தார் பிக்பாஸ். நாள் இறுதியில் அனைத்து அணிகளுக்கும் பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டு மற்றும் டாஸ்கின் இறுதியில் அதிக pointsகள் பெறும் அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிப்பட்டு அடுத்தவார "வீட்டுத்தல" போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்று பிக்பாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், சாம்பார் squadல் கனி, பாரு, சாண்ட்ரா, திவ்யா, வியானா ஆகியோரும்; mop மாயாவிஸாக சுபிக்க்ஷா, விக்ரம், பிரஜின், கெமி, கம்ருதின்; மற்றும் flush fightersஆக சபரி, அமித், வினோத், அரோரா, ரம்யா ஆகியோரும் இடம்பெற்றனர். மேலும், முதல் நாள் டாஸ்க் நடைபெற்ற விதத்தை வைத்து சக போட்டியளர்களால் சாண்ட்ரா, விக்ரம் மற்றும் ரம்யா ஆகியோர் அணியின் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் weekly task தவிர்த்து daily task -ம் நடைபெற்றது. இதில் மாவு நிரம்பிய bowl ஒருபுறமும் empty bowl மறுபுறமும் வைக்கப்பட்டிருந்தது, மூன்று அணியின் போட்டியாளர்களும் வாயில் card வைத்து மாவை எடுத்து அடுத்தடுத்த போட்டியாளர்களுக்கு pass செய்யவேண்டும். இந்த டாஸ்கில் வெற்றிபெற்றது mop மாயாவிஸ். அத்துடன் அதிக points பெற்று நாளின் இறுதியிலும் weekly task-ல் வெற்றிபெற்றது mop மாயாவி அணிதான். அத்துடன் best மற்றும் worst performerகளை தேர்வுசெய்யும் நேரம் வந்தது. இதில் அமித், பிரஜின் மற்றும் கனி best performers ஆகவும் டாஸ்கின் மூன்று அணிகளின் captain-களான ரம்யா, விக்ரம் மற்றும் சாண்ட்ரா ஆகியோர் worst performersஆக தேர்வுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து இரண்டாவது நாள் நடைபெற்ற டாஸ்கில், சாம்பார் squad இன்றைக்கு இதுதான் menu என்று தாங்கள் செய்யவிருக்கும் உணவிற்கு பட்டியலிட்டனர். விதிமீறலில் ஈடுபடும் சாம்பார் squadக்கு குட்டு வைக்க நினைத்த பிக்பாஸ், மற்ற போட்டியாளர்களிடம் உணவை தேர்வுசெய்வதற்கான choice ஐ வழங்கினார். இதில் வினோத்தின் 'கார கத்திரிக்காய்' ஆசை வீட்டிற்குள் பிரளயமாய் வெடித்தது.
இதனையடுத்து, "கொஞ்சம் பாட்டு, கொஞ்சம் points" என்ற daily task நடைபெற்றது. இதில் "கண்கள் இரண்டால்" பாடலுக்கு சரியாக சைக்கிளில் ஏறி வலம் வந்தார் கமுருதீன். இதனைக்கண்ட அரோரா மகிழ்ச்சியில் புன்னகைக்க, "உங்களுக்குன்னு பாட்டு வந்து அமையுது பாருங்க கமரு" என்று கிடைத்த கேப்பில் score செய்தார் பிக்பாஸ். இதைப்போலவே "கூட மேல கூட வெச்சு" பாடலுக்கு சரியான குடையை FJ எடுத்தபொழுது பிக்பாஸ் கேமராவின் full focus-ம் வியானா மீதுதான் இருந்தது. இதனால் சைலண்டாக வளர்த்துக்கொண்டிருக்கும் மற்றொரு ஜோடியும் highlight ஆனது. இந்த டாஸ்கின் இறுதியில் mop மாயாவிஸ் வெற்றிபெற்றனர். அத்துடன் நாள் இறுதியில் points தரவேண்டிய நேரத்தில் mop மாயாவிஸ் அணிக்கு சாண்ட்ரா நான்கு points கொடுத்திருந்தார். மேலும் மற்ற அணிகளால் தலா ஒரு point மட்டுமே பெற்றிருந்த சாம்பார் squad "அடுத்தநாள் வெறும் ரவா கஞ்சிதான் எல்லாருக்கும் கொடுக்கணும்" என்று கலந்து பேசினர்.
ஆனால் அடுத்த நாள் மனதை மாற்றிக்கொண்டு கனி அனைவருக்கும் சமைத்துக்கொடுக்க தயாரானதால் சாண்ட்ரா, திவ்யா, பாரு மற்றும் கனி இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலனிடையே பட promotionகாக வந்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் பூர்ணிமா, கிச்சன் டீமிற்கு மூன்று points கொடுத்துவிட்டு சென்றார். இதனால் சாம்பார் squad வானத்தில் பறக்க, மற்ற அணிகளுக்கு zero points கொடுத்து அதேபோல மற்ற அணிகளிடமும் zero point பெற்றுக்கொண்டது. இந்த டாஸ்கின் இறுதியில் அதிக points வைத்திருந்த mop மாயாவிஸ் அணி சிறந்த அணியாக தேர்வுசெய்யப்பட்டு அடுத்த வார "வீட்டுத்தல" போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.
அதே போல worst performerகளாக தேர்வான சாண்ட்ரா மற்றும் திவ்யாவுக்கு சிறைக்கு தண்டனையோடு வீட்டுவேலை, சமையல் அனைத்தையும் செய்யவேண்டும், அவர்களை விக்ரம் மேற்பார்வையிடவேண்டும் என்று பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறைத்தண்டனையிலும் பிரச்சினை செய்யவேண்டும், விதி மீறலில் ஈடுபட வேண்டும் என்ற முடிவோடு இருவரும் இருந்தனர்.
இதனிடையே, திவ்யாவின் அலப்பறை குறித்து பேசிக்கொண்டிருந்த விக்ரம், "நான் யாரையும் ஹர்ட் பண்ண இங்க வரலை. என் திறமையைக் காட்டத்தான் வந்துருக்கேன்" என்று கூறினார். விக்ரமின் பேச்சில் திடீரென கோவமான பிரஜின், "சாண்ட்ராவும் நானும் couples தான். ஆனா தனித்தனியாதான் ஆடுறோம். வேணும்னா பிக் பாஸ் கிட்ட 2 நிமிஷம் கதவை திறக்கச் சொல்றேன். போய் உங்க wife கூட்டிட்டு வாங்க" என்று கோவமாக பேசினார்.
மேலும், worst performersஆக தேர்வான திவ்யா மற்றும் சாண்ட்ரா இருவரும் விக்ரமை வம்புவழக்க வேண்டும், விதிமீறலில் ஈடுபடுவது போன்ற செயல்களை செய்வதிலேயே குறியாக இருந்தனர். இரவு நேரம் வந்தது விக்கல்ஸிடம் எனக்கு தல வலிக்குது பால் டீ வேணும் என்று ஆரம்பித்தார் திவ்யா. காலை, மாலை மட்டும்தான் பால் தர முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே black tea போட்டு குடிங்க என்று கூறி பால் டப்பாக்களை எடுத்துசென்றார் FJ. இதனால் வீட்டிற்குள் சலசலப்பு ஏற்பட நடுவில் வந்த பிரஜின், "இவன் (FJ) பால யாருக்கு ஊத்த போறான்" போன்ற தகாத வார்த்தைகளை பேசி இருந்தார். "இவுங்க அடங்க மாட்டாங்க" என்று முடிவு செய்த பிக்பாஸ், திவ்யாவுக்கு மாத்திரைகளை அனுப்பியதுடன், "விக்ரம் மற்றும் FJ இருவரும் சாண்ட்ரா மற்றும் திவ்யாவை சிறையில் வைத்து பூட்டுங்க" என்று அறிவிப்பை வெளியிட்டார்.
எனினும் பிக்பாஸ் பேச்சைக்கூட மதிக்காமல் இருவரும் நேரத்தை கடத்திய நிலையில் ஒருவழியாக விடியற்காலை சிறைக்கு சென்று உறங்கத்தொடங்கினர். அடுத்த நாள் காலை திவ்யா மற்றும் சாண்ட்ரா கிச்சனில் எந்த பாத்திரமும் கழுவவில்லை, வீட்டை சரியாக பெருக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை சாட்சியுடன் முன்வைத்திருந்தார் விக்ரம். இவர்கள் இருவரின் அலப்பறையில் பாரு காணாமல் போய்விடுவார் போல பிக்பாஸ் வீடு அல்லோல பட்டது.
இதையடுத்து வார இறுதி நாளான நேற்று போட்டியாளர்களை சந்திக்க வந்த விஜய்சேதுபதி, "தன்னை புத்திசாலின்னு நபரை முட்டாள்களும்; வீரன்னு நம்புற கோழைகளும் நம்ம வீட்டுலதான் இருக்காங்க" என்று கூறி போட்டியாளர்களை சந்தித்தார். "திவ்யா, சாண்ட்ரா நல்லாயிருக்கீங்களா.. இவுங்க வீரமங்கையர்கள்... பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. ” என்று நேரடியாக point-ஐ தொடங்கினார் விஜய்சேதுபதி.
"ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு சொன்னிங்க என்று இருவரிடமும் விஜய்சேதுபதி கேட்க, தலைவலி சார் டீ போட பால் தரமாட்டேனு சொன்னாரு என்று பதிலளித்தார் திவ்யா. தொடர்ந்து "திவ்யாவிக்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யல?” என்று சாண்ட்ராவிடம் விஜய்சேதுபதி கேட்க "செஞ்சேன் சார்... அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி... அதான் கூடவே இருந்துட்டேன்" என்று கூறி மழுப்பினார் சாண்ட்ரா.
தொடர்ந்து சாண்ட்ராவிடம் தனது பேச்சை நகர்த்தி எடுத்துச்சென்ற விஜய்சேதுபதி, "கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா...போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன்... உங்களுக்குள்ள சண்டை போடுங்க... ஆனா பிக் பாஸ் சொல்றத கேளுங்க..." என்று கூறினார்.
தொடர்ந்து திவ்வியாவிடம் கேள்வி கேட்க தொடங்கிய விஜய் சேதுபதி, "ஏன் வேலை செய்யல?" என்று கேட்டார் அதற்கு பதில் கூறாமல் நின்ற திவ்யாவிடம், "நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் rule. பதில் சொல்லித்தான் ஆகணும் எனக்கு" என்றுகூறி break சென்றார். இந்த இடைவெளியில் சாண்ட்ராவிடம் பேசிய திவ்யா, "என்ன பதில் சொல்லணும்னு தெரியல... விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்" என்று கூற மீண்டும் போட்டியாளர்களை சந்திக்க வந்த விஜய்சேதுபதி, இதை நீங்க சபையிலையே ஒத்துக்கலாமே என்று திவ்யாவிடம் கூறியதுடன், "எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க சாண்ட்ரா" என்று எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து கணவன் மனைவியாக சாண்ட்ராவும், பிரஜினும் பிக்பாஸ் வீட்டிற்குள் செயல்படுவதால் போட்டியாளர்களின் நடுவே ஏற்படும் சலசலப்பு குறித்து பேசத்தொடங்கினார் விஜய்சேதுபதி. அப்போது, பிரஜினிடம் தனது கேள்விகளை தொடங்கிய விஜய் சேதுபதி, "பிரஜின், விக்ரமிடம் "வேணும்னா பிக் பாஸ் கிட்ட சொல்லி 2 நிமிஷம் கதவை திறக்கச் சொல்றேன். போய் உங்க wife கூட்டிட்டு வாங்க" என்று கூறியது "வண்டி என் பக்கம் வந்துச்சுனா கண்டம் ஆகிடும் இடிச்சி தள்ளிட்டு போகிட்டே இருப்பேன்", "நான் சரியா வளர்க்கப்பட்டவன், i'm man, hero, husband, father", "வியானா, சுபிக்க்ஷாவை காலி பண்ணிடுவேன்", "இந்த பாலை யாருக்கு ஊத்த போறான்" என்று FJ வை குறித்து கேட்டது, போன்ற அனைத்து வார்த்தைகளையும் சுட்டிக்காட்டிய விஜய்சேதுபதி, இவுங்கதான் சரியா வளர்க்கப்பட்டவங்க என்று கூறினார்.
"நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்", "நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க... நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க" ஒண்ணும் புரியல என்று பிரஜின் கூற, "சண்டை போடுங்க... அது உங்க கேம்... ஆனா அது ஒரு எல்லைக்குள்ள இருக்கணும், உங்களுக்கு game புரியனும் இன்னும் time எடுக்கும்" என்று கூறி விடைபெற்று சென்றார் தொகுப்பாளர் விஜய்சேதுபதி.
இதனை தொடர்ந்து, இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், eviction சற்று வித்தியாசமாக நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் maruti suzuki car இரண்டு வருகிறது. "இதில் nomination-ல் இருக்கின்ற கெமி மற்றும் பிரஜின் ஆகிய இருவரும் ஒவ்வொரு carல் ஏறவேண்டும். அவர்கள் ஏறிய பின்பு இரண்டு car-களும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே செல்லும். மேலும், இதில் ஒரு car பிக்பாஸ் வீட்டிற்கு திரும்ப வராது என்றும் அந்த நபர் eliminate செய்யப்படுவார்" என்றும் பிக்பாஸ் தரப்பில் அறிவிக்கப்படுகிறது. இதனால் சாண்ட்ரா கதறி அழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே போட்டியாளர்களிடையே பிரஜின் மற்றும் சாண்ட்ரா BB வீட்டிற்குள் தம்பதிகளாக செயல்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரஜின் இந்த வாரம் evict செய்யப்படலாம் என்று பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
"ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது" - தலைமை நீதிபதி கருத்து !
-
திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்... திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை !
-
4 தென் மாவட்டங்களுக்கு Orange Alert.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... என்னென்ன பகுதிகள்? - விவரம்!
-
”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!
-
சாலை விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் உயிரிழப்பு... முதலமைச்சர் இரங்கல் & நிதியுதவி!