Cinema
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கி மூன்று வாரங்களை கடந்து விட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் வீட்டில் இருந்து இதுவரை வெளியேறியுள்ளனர். மேலும், முதல் வார "வீட்டு தல"-யாக தேர்வாகி இருந்த துஷார், தான் வீட்டுத்தல என்பதையே மறந்து வீட்டிற்குள் மைக் கூட மாட்டாமல் வலம் வந்ததால், வார மத்தியிலேயே "வீட்டு தல" என்ற பொறுப்பை பறிகொடுத்தார். இதையடுத்து போன வார இறுதியில் நடைபெற்ற "வீட்டு தல" டாஸ்கில், கனி வெற்றிபெற்றிந்தார்.
இதைத்தொடர்ந்து, இரு வீட்டில் இருந்தும் போட்டியாளர்கள் அணி மாறவேண்டிய நேரம் வந்தது. இதில், பிக்பாஸ் வீட்டில் இருந்து FJ மற்றும் சபரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் super deluxe வீட்டில் இருந்து அணி மாற நடைபெற்ற "Kikkibiki Kikkibiki" என்ற டாஸ்கில், வியானா மற்றும் பார்வதி தேர்வாகினர். அத்துடன் super deluxe வீட்டில் யாருக்கு nomination free pass வழங்குவது என்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திவாகர் மற்றும் FJ இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்காக நடைபெற்ற nomination process-ல், ஆதிரை, துஷார், கலையரசன், பிரவீன் குமார், சுபிக்ஷா, ரம்யா ஜோ, வியானா மற்றும் அரோரா ஆகியோர் சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டனர். இதில், பார்வதி மற்றும் கமருதீன் பெயர் இடம்பெறாதது அவர்களுக்கே வியப்பாக இருந்தது.
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் Juice Factory என்ற weekly task ஆரம்பித்தது. இந்த டாஸ்கில் super deluxe வீட்டார் owners, பிக்பாஸ் வீட்டார் bottle suppliers. ஆனால் இரு வீட்டில் இருந்தும், "இவுங்களால bottle collect பண்ணவும் முடியாது, திறமையா பேசி விற்கவும் முடியாது" என்ற இரு நபர்களை சக போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள்தான் QC officers என்று கூறினார் பிக்பாஸ். அத்துடன், ஒரு ownerக்கு எத்தனை bottleகள் approval ஆகிறதோ அத்தனை coins வழங்கப்படும். அதிக coins பெறும் நபருக்கு nomination free சலுகை கிடைக்கும் என்பது போன்ற கோர்க்குமாற்கான விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது. இதில், QC officer-களாக தேர்வானது பார்வதி மற்றும் திவாகர்.
டாஸ்க் தொடங்கியது, QC officers bottle-களை approval செய்வதை விட reject செய்வதிலேயே மிகவும் கவனமாக இருந்தனர். அத்துடன், QC officersஐ ஐஸ் வைக்கிறோம் என்ற பெயரில் முட்டை தொக்கு செய்து தருவது, கை, காலை அமுக்கி விடுவது, மாதுளை பழம் ஊட்டிவிடுவது, இது எல்லாம் போதாது என்று watermelon star திவாகருடன் சுபிக்ஷா, அரோரா, வியானா ஆகியோர் reels செய்தனர். இதனிடையே திவாருக்கும் பார்வதிக்கும் சண்டையும் நடந்தது. இதில் சில காட்சிகள் காண்பதற்கு முகம் சுழிக்க வைக்கும் விதத்தில் இருந்தாலும், அதிகாரம் கையில் கிடைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது வெட்டவெளிச்சமானது.
இந்த டாஸ்கின் இறுதியில், owners பெற்றிருந்த coins, ஆதிரை - 5, வினோத் - 0, சபரி - 8, FJ - 2, ரம்யா - 23 மற்றும் சுபிக்ஷா - 37. அதே போல, suppliers பெற்றிருந்த coins, விக்ரம் - 1, துஷார் - 1, அரோரா - 1, பிரவீன் - 18, கமருதீன் - 2, கலையரசன் - 4, கெமி - 6, வியானா - 0 மற்றும் கனி - 9. இதன் விளைவாக, பிரவீன் அடுத்த வார எவிக்ஷனில் இருந்து தப்பித்ததுடன், super deluxe வீட்டிற்கு செல்வதற்கும் தகுதி பெற்றார். அதே போல, 37 coins வைத்திருந்த சுபிக்ஷா எவிக்ஷனில் இருந்து தப்பித்ததுடன், பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரை காப்பாற்றுவது என்பதை தேர்வு செய்யும் அதிகாரமும் பெற்றுள்ளார்.
அத்துடன், இந்த வாரம் worst performers என்று தேர்வான, பார்வதி மற்றும் கமருதீன் சிறைக்கு சென்ற நிலையில், best performers-ஆக தேர்வான பிரவீன், விக்ரம் ஏற்கனவே வீட்டு தலயாக இருக்கும் கனி ஆகியோர் அடுத்த வார ''வீட்டு தல'' போட்டியிலும் பங்கிற்கவும் தகுதி பெற்றனர்.
இந்த வாரம் போட்டியாளர்கள் வன்முறையை அதிகமாகவே கையில் எடுத்து செயல்பட்டனர். அத்துடன் நிகழ்ச்சியை காண்போரின் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளும் அதிகமாகவே இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக என்ன பேச போகிறார் விஜய்சேதுபதி என்று பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வந்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, "இந்த வாரம் முழுவதும் நாறிடுச்சு இந்த ஷோ" என போட்டியாளர்களுடன் கடுமையாக பேசியதுடன், வரும் பொழுதே பாகர்காய் juice-ஐ எடுத்து வந்து போட்டியாளர்கள் அனைவருக்குமே கொடுத்து குடிக்க சொன்னார். மேலும், FJ வை அனுப்பி ஒரு jug முழுவதும் பாகர்காய் juice-ஐ எடுத்து வரவழைத்த விஜய் சேதுபதி "கேட்குற கேள்வியை சுத்த விட்டா juice குடிக்கணும்" என எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து, Juice Factory டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி, QC officers திவாகர் மற்றும் பார்வதி போட்டியை சுவாரசியமாக கொண்டு சென்றதாக கூறினார். அத்துடன், "உங்க தைரியத்தலாம் வெகுவா பாராட்டுறேன்" என எதுகை மோனையில் பேச தொடங்கிய விஐய் சேதுபதி, ஆதிரை, கலையரசன், கமருதீன், திவாகர், பார்வதி, வினோத், துஷார் ஆகியோரை குறிப்பிட்டு, "நீங்க எல்லாம் என்ன நினைச்சுகிட்டு பண்ணுறீங்கனு தெரியல, உங்க தைரியத்த show-ல காட்டுங்க.. இரண்டு மூன்று பேருக்கு red card கொடுக்கலயானு பார்வையாளர்கள் கேட்குறாங்க. நீங்க உங்க control-ல இருக்குற வரைக்கும் நல்லது. இல்லைனா மக்கள் vote போட்டு அனுப்புற வரைக்கும் காத்துகிட்டு இருக்க மாட்டேன். ஒரு stage -க்கு மேல போகுது தேவையில்லனா நீங்க கிளம்புங்கன்னு சொல்ல வேண்டியது இருக்கும்" என போட்டியாளர்களை கடுமையாக எச்சரித்தார்.
இந்நிலையில், ஏற்கனவே தன்னை சக போட்டியாளர்கள் உருவ கேலி செய்து வருவதாக திவாகர் தொடர்ந்து விஜய் சேதுபதியிடம் கூறி வந்தார். இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில், "வினோத் sir daily night தூங்க விட மாட்டிக்குறாரு, இது ரொம்ப bad manners -ஆ இருக்குது, என்ன வச்சி famous ஆக purposeful-ஆ வம்பு இழுக்குறாரு" என குற்றச்சாட்டு வைத்தார் திவாகர். இதற்கு பதில் கூறும் விஜய் சேதுபதி, "திவாகர் jollya, fun-ஆ இருக்கறதுனால அவர் மேல advantage எடுத்துக்குறத எந்த சுழல்லையும் ஏத்துக்க முடியாது. அது சரியில்ல" என கூறி வினோத்தை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !